தாய்லாந்து வீக் 2018' வர்த்தக கண்காட்சி இன்று தொடக்கம்

சென்னையில் தாய்லாந்து வீக் 2018' வர்த்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


சென்னையில் தாய்லாந்து வீக் 2018' வர்த்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது: இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இக் கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் கண்காட்சியில் சுகாதாரம், உணவு, அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. தாய்லாந்து கலாசார நிகழ்ச்சிகள், சமையல் முறை, கைவினைப் பொருள்கள் பயிலரங்கம் ஆகியவையும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.