
உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அலுவலக உதவியாளர் காலி பணியிடம்: மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், காவலர் பணியிடத்துக்கு மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர்
சென்னை மாவட்ட உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், காவலர் பணியிடத்துக்கு மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் 7 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சமாக 18 முதல் 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 32 வயது வரையிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 35 வயதுக்கு உள்ளேயும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்கப்படும்.
காவலர் பணியிடத்துக்கு: சென்னை நந்தனத்தில் உள்ள உள்ளாட்சி நிதித் தணிக்கை, இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இயக்குநர் அலுவலகம், உள்ளாட்சி நிதித் தணிக்கை, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகக் கட்டடம், 4-ஆவது தளம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு மே 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




