வனவர் காலிப் பணியிடம்: தேர்வுக்கான நுழைவுச் சீட்டு தயார்

வனவர் பணிக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

வனவர் பணிக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
வனவர் காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இதற்கான இணைய வழித் தேர்வு வரும் 25,  26,  27,  28 ஆகிய நான்கு தினங்களில் 150 மையங்களில்  நடைபெறுகிறது. 
தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதாவது https://tnfusrc.in என்ற இணையத்துக்குச் சென்று நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.