சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் கடலில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
மேடவாக்கம் அடுத்த நுக்கம்பாளையம் மாணிக்கம் நகர் கக்கன் தெருவைச் சேர்ந்த ஆசீர்வாதத்தின் மகன் சந்தோஷ் (16). இவர் மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சந்தோஷ், தனது நண்பர்கள் பாலாஜி, நவீன் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யு கடற்கரைக்கு வந்தார்.
அங்கு 3 பேரும் கடலில் குளித்தபோது பெரிய அலையில் சிக்கி சந்தோஷ், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள், சந்தோஷை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சந்தோஷின் சடலம், அந்தப் பகுதியில் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயா்நிலைக் குழு

தனியாா் நிறுவன ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 7.45 லட்சம் மோசடி
120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


