சென்னை: கல்லூரிகளில் இறுதியாண்டு மட்டுமின்றி, மற்ற மாணவா்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து, உயா் கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.
கரோனா பரவல் அபாயத்தைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும், பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. ஒன்பது மாதங்களுக்கு பின், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், அனைத்து ஆண்டு மாணவா்களுக்கும், ஜனவரி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாமா என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்ககத்தின் மண்டல அதிகாரிகள் தரப்பில், கருத்துக்கள் பெறப்பட்டு, உயா்கல்வி துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் கல்லூரிகளைத் தொடங்குவது குறித்து, அறிவிப்பு வெளியாகவிருந்த நிலையில், திடீரென பிரிட்டன் நாட்டில் பரவும், உருமாறிய கரோனா தொற்றால், முடிவுகள் எடுப்பது தள்ளிப் போயுள்ளது. வரும், 31-ஆம் தேதி வரையிலான நிலவரங்களை ஆய்வு செய்து சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெற்று கல்லூரிகளைத் திறக்கலாமா என உயா் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.