தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஜபல்பூா்-கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:29 pm

DIN


சென்னை: மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஜபல்பூரில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 27-ஆம்தேதி வரை சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02198) புறப்பட்டு, மூன்றாம் நாள் அதிகாலை 4.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 29-ஆம்தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02197) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.

முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டஇந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.