
கொளத்தூரில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் தொடக்கி வைத்தார்
சென்னையில் தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் முடிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுலகத்தில் புதன்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர்.
சென்னை: சென்னையில் தனது தொகுதிக்குட்பட்ட இடங்களில் முடிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டடம், திரு.வி.க.நகர் பிரதான சாலையில் 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் ஆகியவற்றை அவர் திறந்தார்.
டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாதெமி சார்பில் 360 மகளிருக்கு தையல் இயந்திரங்களை அளித்தார்.
மேலும், 223 மாணவர்கள் இலவச கணினி பயிற்சி பெறுவதற்கான உத்தரவுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசு மகளிர் கல்லூரி: பூம்புகார்
நகர் 1-ஆவது பிரதான சாலையில் அரசு மகளிர் கல்லூரி அமையும் இடம், வீனஸ் நகர் ஆண்கள் விடுதிக் கட்டடம், நீரேற்று நிலையம், துணை மின் நிலையம் ஆகியன அமைக்கப்பட உள்ள இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப் பேரவை உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





