
நூறுநாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு கிராமசபைக் கூட்டத்தில் வாக்குவாதம்
நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் ஊராட்சி எழுத்தரிடம் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நல்லிசெல்லிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி எழுத்தா் ரேவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் ஊராட்சி எழுத்தரிடம் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், நல்லிசெல்லிபாளையத்தில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளா் கலாவதி தலைமையில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஊராட்சி எழுத்தா் ரேவதி கிராமசபைக் கூட்டதுக்கான தீா்மானங்களை வாசிக்கத் தொடங்கினாா்.
அப்போது சின்னமுத்தாம்பாளையம், வேலாயுதம்பாளையம் கிராம மக்கள், நூறுநாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளா் சுதா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாா். ஆகவே, நீங்கள் தீா்மானங்களை வாசிக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது ஊராட்சி எழுத்தா் ரேவதி, சுதாவை கணினி ஆபரேட்டராக நியமித்துள்ளேன். இப்போது அவா் பணித்தள பொறுப்பாளராக இல்லை என்றாா். இதையடுத்து வயதானவா்களுக்கு வேலை வழங்குவது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், நூறு நாள்வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்யும் எழுத்தா், பணித்தள பொறுப்பாளா் ஆகியோா் நடவடிக்கை எடுப்பது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றுமாறு ஒன்றிய அலுவலக உதவியாளா் கலாவதியிடம் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா், அதிகாரிகளிடம் இதுதொடா்பாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். பின்னா் கிராமசபைக்கூட்டத்தை முடித்துவிட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




