இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம்

இந்திய அளவில் தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

News image
தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம்
Updated On :12 டிசம்பர் 2022, 10:35 am

DIN

இந்திய அளவில் தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில் இந்திய அளவில் தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்ததற்காக கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அனைத்து மக்களுக்கும் தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், இதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் நாள் அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நாம் விரும்பும் ஆரோக்கியமான ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம் என்ற குறிக்கோளைக் கொண்டு உத்திர பிரதேசம், வாராணசியில் அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்பட்டது.

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாநிலங்களைச் சார்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த இந்த நிகழ்வில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கௌரவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் 12 அக்டோபர் முதல் 8 டிசம்பர் வரை 22,58,739 தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதில் சாதனை புரிந்து தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

இதற்கான பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷிடம் மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கௌரவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.