மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.216 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,512-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,512-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மார்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் அதிரடி சரிவை கண்ட நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ரூ.38,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.27 குறைந்து, ரூ.4,814-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.72.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.72,900 ஆகவும் இருக்கிறது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,814
1 சவரன் தங்கம்............................... 38,512
1 கிராம் வெள்ளி............................. 72.90
1 கிலோ வெள்ளி.............................72,900
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,787
1 சவரன் தங்கம்............................... 38,296
1 கிராம் வெள்ளி............................. 72.10
1 கிலோ வெள்ளி.............................72,100
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...