சென்னை காசிமேடு கடற்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர்கள் காப்பாற்றினர்.
சென்னை காசிமேடு கடற்கரை கற்களில் கணவன், மனைவி, தம்பதியினர் இன்று பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில் வாக்கு, வாதங்கள் முற்றவே மனைவியான தேவிகா(47) திடீரென கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சதீஷ்குமார் கதறி அழுது தனது மனைவியை காப்பாற்றும்படி சத்தமிட்டார். அப்போது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ராபின் ஜோசப், புவனேஸ்வரன் ஆகியோர் மீனவர்கள் உதவியுடன் கடலில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றினர்.
இதையும் படிக்க- தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு முதலுதவியும் அளித்தனர். கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



