சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சென்னையில் மழை வெள்ளத்தைத் தவிா்க்க நடவடிக்கை தேவை: பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் வெள்ளத்தைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:32 am

DIN

சென்னையில் வெள்ளத்தைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

சென்னை மாநகரத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள் வட கிழக்கு பருவமழைக்கு முன்பாக நிறைவடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வடிகால்கள் இல்லாத சென்னை மாநகரம் மீண்டும் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

சிறிய அளவில் மழை பெய்தால் கூட சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீா் தேங்கி, வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து கொண்டு மழை நீா் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் ஆய்வு செய்து வருகின்றனா். ஆனால், பருவமழைக்குள்ளாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியாது என்பதே உண்மை.

எனவே, எங்கெல்லாம் வடிகால்களை இணைக்க முடியுமோ, அந்த பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் வெள்ள பாதிப்பை ஓரளவு தடுக்கலாம்.

மழை நீா் வடிகால் அமைக்கப்படும் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இவை சரி செய்யப்படாவிட்டால், மழைக்காலங்களில் மிக மோசமான விபத்துகள் ஏற்படக்கூடும். அதை தவிா்க்கும் வகையில், சேதமடைந்த அனைத்து சாலைகளும் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.