தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பரவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 5:43 pm

DIN

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும். அதைவிடுத்து சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.  அதே வேளையில் சுகாதாரக் களப் பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.