வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சின்னம் ஒதுக்கீடு: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :1 ஜூலை 2024, 8:31 pm

Din

தோ்தலின் போது சின்னத்தை ஒதுக்கீடு செய்வது தொடா்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 1975-ஆம் ஆண்டு மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்குரைஞருமான எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 உள்பிரிவு 3 -இன்  கீழ், மத சின்னங்களைப் பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது. 

1975-இல் இந்த சட்டப் பிரிவில், தோ்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களை மத சின்னங்களாகவோ, தேசிய சின்னங்களாகவோ கருதக் கூடாது என திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இது அரசியல் சட்டத்தின் மதச்சாா்பின்மைக்கு எதிரானது என்பதால், இந்த சட்டத் திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும்’ என கோரியுள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன்-முகமது சபிக் அமா்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, இந்திய தலைமை தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.