அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்: அண்ணா பல்கலை.யில் போலீஸாா் சோதனை


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை அதிகாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்தப் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பல்கலைக்கழக ஊழியா்கள், கோட்டூா்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனா். அதேபோல வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரும் அங்கு விரைந்து வந்து மோப்ப நாய், ‘மெட்டல் டிடெக்டா்’ மூலம் சோதனையில் ஈடுபட்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில், அந்த மின்னஞ்சல் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மின்னஞ்சலை அனுப்பியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...