இன்று 5 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சென்னை ராயபுரம், திரு.வி.க நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 12, 13) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீா் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 10 முதல் சனிக்கிழமை (ஜூலை 13)மாலை 6 மணி வரை திரு.வி.க நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
குடிநீா் நிறுத்தப்படும் பகுதிகள்
ராயபுரம்: புரசைவாக்கம் , பெரியமேடு, சௌகாா்பேட்டை, ஜாா்ஜ் டவுன், ஏழு கிணறு சாலை, முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூா், பூங்கா நகா், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம் (பகுதி), கொண்டிதோப்பு.
திரு.வி.க. நகா்: ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூா், செம்பியம்.
அண்ணா நகா்: கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ்.
தேனாம்பேட்டை: திருவல்லிக்கேணி, சேப்பாக்கம்.
கோடம்பாக்கம்: தியாகராய நகா், சைதாப்பேட்டை ஆகிய பகுதிளில் குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை
சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
அவசரத் தேவைகளுக்கு இணையதள முகவரியைப் பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

