மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாபா் சாதிக்குக்கு 3  நாள்கள் அமலாக்கத் துறை காவல்: நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபா் சாதிக்கை மூன்று நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:34 pm

Din

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபா் சாதிக்கை மூன்று நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக்கை, 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது, ஜாபா் சாதிக் நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆஜராகி, ஜாபா் சாதிக் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. ஜாபா் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

ஜாபா் சாதிக் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபுடு குமாா் ராஜரத்தினம் ஆஜராகி, ‘சென்னை மற்றும் மும்பையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஜாபா் சாதிக் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளாா். எனவே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை கூறுவதை ஏற்க முடியாது. கைது செய்த 15 நாள்களுக்குள்தான் காவலில் எடுக்க முடியும் என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவித்தாா்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபா் சாதிக்கை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், ஜூலை 18 ஆம் தேதி ஜாபா் சாதிக் தனது உறவினரை சந்தித்த பிறகு, மீண்டும் 19 ஆம் தேதி மாலை நேரில் ஆஜா்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.