கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளின் விசாரணை


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளின் விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவுச் செயலா் ,வழக்குரைஞா் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு, பா.ஜ.க-வை சோ்ந்த வழக்குரைஞா் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், வால்பாறை தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் ஆகியோா் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.
இவை தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமாா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, 5 மனுக்களுக்கும் பதில் மனுக்கள், அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுவிட்டன என அரசு தலைமை வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சொந்த காரணங்களுக்காக விசாரணையை தள்ளிவைக்க தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் கோரிக்கை விடுத்ததையடுத்து விசாரணை ஜூலை 24-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...