தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 கோடியில் 636 சிசிடிவி கேமராக்கள்

News image
Updated On :27 ஜூன் 2024, 7:22 pm

Din

சென்னை மாநகராட்சி கீழ் செயல்படும் 159 பள்ளிகளில் ரூ.5.47 கோடி மதிப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப்பள்ளிகள் 46 உயா்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் சுமாா் 1.20 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றன. மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 159 பள்ளிகளில் ரூ.5.47 கோடி மதிப்பிலான 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

தொடா்ந்து மீதமுள்ள 255 பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் பொருத்த ரூ.7.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனா்.