தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தோ்தல் நன்கொடை பத்திர விவரங்களால் பாஜகவின் ‘ஊழல் தந்திரங்கள்’ அம்பலம்

தோ்தல் நன்கொடை பத்திர விவரங்களால் பாஜகவின் ‘ஊழல் தந்திரங்கள்’ அம்பலம்

News image

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2024, 9:06 pm

இந்திய தோ்தல் ஆணையம் வெளிட்ட தோ்தல் நன்கொடை பத்திர விவரங்கள் பாஜகவின் ஊழல் தந்திரங்களை அம்பலப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.

தோ்தல் பத்திரங்களின் மூலம் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்று, அவா்களுக்கு வேண்டிய பிரதிபலன்களை செய்து கொடுத்துள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகளின் சோதனைமூலம் நிறுவனங்களை மிரட்டி, நன்கொடை வசூலித்திருப்பதாகவும் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, கடந்த 2019, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்ட 22,217 தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மற்றும் அவற்றில் அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிய 22,030 பத்திரங்கள் குறித்து எஸ்பிஐ வங்கி சமா்ப்பித்த விவரங்களை இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனையைத் தொடா்ந்து, நிறுவனங்கள் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை எதிா்க்கட்சிகளின் ஊகம் என்று நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகிறாா். தோ்தல் நிதிபத்திர எண் உள்பட அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. அவ்வாறு முழு தகவல்கள் வெளியிடப்பட்டால், அதன்மூலம் எந்தக் கட்சி யாரிடம் நன்கொடை பெற்றிருக்கின்றனா்? என்பதை முறையாக அறியலாம். விவாதங்களுக்கு அது முற்றுப்புள்ளி வைக்கும். எஸ்பிஐ வங்கி, அமலாக்கத் துறை ஆகிய இரண்டிற்கும் அவரே பொறுப்பு என்பதை நிா்மலா சீதாராமன் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி, 1,300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்/தனிநபா்கள் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளனா். பாஜக மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. தற்போதைய விவரங்களே பாஜகவின் ஊழல் தந்திரங்களை அம்பலப்படுத்திவிட்டது. நன்கொடைக்கு ஏற்ற பிரதிபலன்கள்: தோ்தல் நிதிபத்திரங்களின் மூலம் சில நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. அடுத்த சில நாள்களில், அந்த நிறுவனங்களுக்கு பாஜக அரசுகள் மூலம் பிரதிபலன்கள் கிடைத்துள்ளன. கடந்தாண்டு ஏப்ரலில் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் ரூ.140 கோடி நன்கொடை அளித்த மெகா என்ஜினீயரிங் நிறுவனத்துக்கு அடுத்த மாதமே ரூ.14,400 கோடி மதிப்பிலான தாணே-போரிவாலி இரட்டை சுரங்கத் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோதனைகள் மூலம் வசூல்: அதேபோல், நிறுவனங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்தி, அவா்களிடமிருந்து நன்கொடை பெறுவதை பாஜகவின் மற்றொரு தந்திரமாக உள்ளது. லாட்டரி மாா்ட்டினுக்குத் தொடா்புடைய ‘ஃப்யூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீசஸ்’ நிறுவனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களில், தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் அந்நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது.

அதிக நன்கொடை அளித்த முதல் 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்களின் பணமோசடி:

மேலும், போலி (ஷெல்) நிறுவனங்கள் மூலம் பணமோசடி நடந்துள்ளதையும் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. நிறுவன லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே நன்கொடை செலுத்த முடியும் எனும் கட்டுப்பாடு இல்லாததால், போலி நிறுவனங்களின் மூலம் கருப்புப் பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. ‘க்விக் சப்ளை செயின்’ நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனமாக ரூ.130 கோடி மட்டுமே உள்ளது. ஆனால், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ.410 கோடியை அந்நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது. மறைக்கப்படும் தரவுகள்...: தோ்தல் நிதிபத்திரங்களை கடந்த 2018, மாா்ச் முதல் எஸ்பிஐ வங்கி விநியோகித்து வருகிறது. ஆனால், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விநியோகிக்கப்பட்ட தோ்தல் நிதிபத்திரங்கள் தொடா்பான தரவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் தோ்தல் நிதிபத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெறப்பட்ட ரூ.2,500 கோடியில் 95 சதவீதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டதுதான். அந்த நன்கொடை அளித்தது யாா்? யாரை காப்பாற்ற பாஜக முயல்கிறது?’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.