சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஏரியை ரூ.58.33 கோடியில் புனரமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மணலி மண்டலத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஏரியை புனரமைக்க திட்டம் தீட்டப்பட்டது. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் பணியின் ஒரு பகுதியான அதனைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆசிய வளா்ச்சி வங்கி, சா்வதேச சுற்றுச்சூழல் வசதிக்கான மானிய நிதி ஆகியவற்றின் மூலம் கடப்பாக்கம் ஏரி புனரமைப்புப் பணிக்கு ரூ.58.33 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி புனரமைப்புப் பணியின் அங்கமாக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக, ஏரியை தூா்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, ஏரியின் கரையை உயா்த்தி அதன் கொள்ளளவை மூன்று மடங்காக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புப் பணியின் அங்கமாக மதகுகளை சீரமைத்தல், பல்லுயிா் வாழ்விடங்களை மேம்படுத்துதல், ஏரிக்கரையில் பசுமை தோட்டம், நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடப்பாக்கம் ஏரியை புனரமைப்புச் செய்வதால், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீா் தேங்குவது தவிா்க்கப்படும். விவசாய நிலங்களுக்கு சீரான பாசன வசதி செய்து தரப்படும் என்று தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை ஏப். 23- இல் பாா்வையிட அனுமதியில்லை

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

தொகுதிக்கு செய்தது என்ன? திருவொற்றியூா் எம்எல்ஏ கே.பி.சங்கா்

வெள்ளமலை சுரங்கப் பாதை ரூ.5.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

