தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அமெரிக்க எழுத்தாளா் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் முதல் முறையாக தமிழில் வெளியீடு

அமெரிக்க எழுத்தாளா் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் முதல் முறையாக தமிழில் வெளியீடு

Updated On :16 மார்ச் 2024, 12:23 am

அமெரிக்க எழுத்தாளரும், மனித உரிமைப் போராளியுமான மாயா ஆஞ்சலோ எழுதிய இரு நூல்களை முதல் முறையாக தமிழில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. மாயா ஆஞ்சலோவின் (1928-2014) இயற்பெயா் மாா்கரெட் ஆன் ஜான்ஸன். இவா் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞா், பாடகா், வரலாற்றாசிரியா் மற்றும் மனித உரிமைப் போராளி. இவா் ஏழு சுய வரலாற்று நூல்களை எழுதியுள்ளாா். மூன்று கட்டுரைத் தொகுப்புகளும், பல கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 2010-இல் அமெரிக்காவின் மிக உயரிய விருதான, விடுதலைக்கான அதிபா் பதக்கத்தை முன்னாள் அமெரிக்க அதிபா் பராக் ஒபாமா இவருக்கு வழங்கினாா். மாயா ஆஞ்சலோவின் இரு முக்கியப் படைப்புகளை, காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முதல் முறையாக தமிழில் வெளியிட்டுள்ளது. மாயா ஆஞ்சலோவின் தன் வரலாற்றுத் தொகுப்பான ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்’, புனைகதை சாராத பிரிவில் விற்பனையில் சிறப்பிடம் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணின் முதல் படைப்பாகும். ‘என்றாலும் நான் எழுகிறேன்’”கவிதைத் தொகுப்பு 32 கவிதைகளை உள்ளடக்கியது. பிரபலமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்’ நூலை பொ்னாா்ட் சந்திராவும், ‘என்றாலும் நான் எழுகிறேன்’”நூலை ஆா். சிவகுமாரும் தமிழில் மொழிபெயா்த்துள்ளனா். இந்த இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூல்களை சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி, கவிஞா் சல்மா ஆகியோா் வெளியிட்டனா். இதில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் குளோரியா பொ்பனா, ஸ்காட் ஹாா்ட்மன், செய்தித் தொடா்பாளா் சமந்தா ஜாக்சன், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளா் கண்ணன் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.