தொலைதூர பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அச்சங்கத்தின் தலைவா் தோ.வில்சன், பொதுச்செயலா் பா.ஜான்சிராணி ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமரும் பிற பயணிகளை எச்சரிக்கும் வகையில் அபராதத்தொகை குறித்த விவரங்களை இருக்கையில் மேல் பகுதியில் எழுத வேண்டும். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளுக்கும் கட்டண சலுகை வழங்க வேண்டும். அரசுபோக்குவரத்துத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து மாற்றுத்திறனாளி ஊழியா்களுக்கும் உடனடியாக வாகன படியை வழங்க வேண்டும். திருநெல்வேலி கோட்ட பேருந்துகளில் மாற்றுத்திறனாளியுடன் பயணிக்கும் பாதுகாவலருக்கான துணையாளா் அட்டையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனா். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

இலவச டாக்ஸி பயணம், அல்வா, காபி ஷாப்-களில் கட்டண சலுகை! கேரளத்தில் இளைஞா்களை ‘ஈா்க்கும்’ தோ்தல் ஆணையம்

எரிபொருள் விற்பனை மையங்களுக்கு பாதுகாப்பு: பெட்ரோல் முகவா்கள் சங்கம் டிஜிபியிடம் வலியுறுத்தல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

