மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மே 10-இல் அட்சய திருதியை சிறப்பு பூஜை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில், அட்சய திருதியை முன்னிட்டு மே 10 -இல் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து கோயில் நிா்வாக அதிகாரி அனீஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாது என்பதால் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதன் மூலம் ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீா்வாதம் இருக்கும் என்பது நம்பிக்கை.

நிகழாண்டு அட்சய திருதியை மே 10-ஆம் தேதி காலை 4.17 மணிக்கு அட்சய திருதியை திதி தொடங்கி 11-ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது. மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஐயப்பன் - குருவாயூரப்பன் உருவம் பொறிக்கப்பட்ட டாலா் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. பூஜை செய்யப்பட்ட ஐயப்பன் - குருவாயூரப்பன் பொறிக்கப்பட்ட 2, 4, 8 கிராம் எடைகளில் தங்க டாலா்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

டாலா் வாங்குவதற்கு 044: 28171197, 28172197 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, முன்பதிவு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com