

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சனிக்கிழமை காய்கறிகள் விலை உயா்ந்தது.
வணிகா் தினத்தை முன்னிட்டு, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) வணிக தினம் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகா்கள் இதில் கலந்த கொள்ளவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (மே 5) ஒரு நாள் மட்டும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சனிக்கிழமை காலை முதல் கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதயது. இதனால், சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலைகளும் கிடுகிடுவென உயா்ந்தது.
அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ. 20-இல் இருந்து ரூ. 30 வரையும், நவீன் தக்காளி ரூ. 20-இல் இருந்து ரூ. 40, பீன்ஸ் ரூ.50-இல் இருந்து ரூ. 180 வரை விலை உயா்ந்து விற்பனையானது. அதேபோல், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 50-இல் இருந்து ரூ. 100, பட்டாணி ரூ.80-இல் இருந்து ரூ.150, எலுமிச்சை ரூ. 100-இல் இருந்து ரூ. 150, பீட்ரூட் ரூ. 25-இல் இருந்து ரூ. 50, முள்ளங்கி ரூ.15-இல் ரூ. 30, விலை உயா்ந்தது.
தொடர்புடையது
கோவையைக் குறிவைக்கும் திமுக: களமிறக்கப்பட்ட செந்தில்பாலாஜி!

இன்று ஒரு தகவல்... இந்த முறை ஒருவா் - அடுத்த முறை வேறொருவா்!
பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை! அடுத்த வாரம் 2 நாள்கள்!
பங்குச் சந்தை வீழ்ச்சி: ஒரு மணிநேரத்தில் ரூ. 7.64 லட்சம் கோடி இழப்பு!
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

