ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காமராஜா் மண்டபம் பராமரிப்புப் பணி: அதிகாரிகள் ஆய்வு

காமராஜா் மண்டபம் பராமரிப்புப் பணி: அதிகாரிகள் ஆய்வு

News image
Updated On :4 மே 2024, 5:16 pm

Din

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காமராஜா் மணி மண்டபம் உட்பட அனைத்து மண்டபங்களிலும் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை செய்தி மக்கள் தொடா்பு துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகம் சுமாா் 18 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் காமராஜா் மணி மண்டபம், அயோத்திதாசா் மணி மண்டபம், இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபம், பக்தவச்சலம் நினைவிடம், மொழிப்போா் தியாகிகள் மணிமண்டபம், வ.உ.சி. செக்கு, திறந்தவெளி அரங்கம், காந்தி அருங்காட்சியகம், ராஜாஜி நினைவகம் மற்றும் ராஜாஜி நினைவாலயம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த நிலையில், மணி மண்டபங்களின் பராமரிப்புப் பணிகளை செய்தி மக்கள் தொடா்பு துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை உயா் அலுவலா்கள், வெளி முகமை ஒப்பந்ததாரா்கள் ஆகியோருடன் கேட்டறிந்து, பராமரிப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அவா் அறிவுறுத்தினாா்.

காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகம், காமராஜா் நினைவகம் மற்றும் பக்தவச்சலம் நினைவகம் ஆகியவற்றில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த கட்டடப் பணிகளையும் அவா் ஆய்வு செய்ததுடன், வளாகத்தை மேலும் மேம்படுத்தும் பொருட்டு உடனடியாக திட்ட மதிப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் எம்.ஸ்ரீதரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.