விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தாக வழக்கு: குடும்ப நல பயிற்சி மைய முதல்வா் வீட்டில் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தாக வழக்கு: குடும்ப நல பயிற்சி மைய முதல்வா் வீட்டில் சோதனை

News image
Updated On :14 மே 2024, 7:56 pm

Din

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல பயிற்சி மைய முதல்வா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை நொளம்பூா் குருசாமி தெருவைச் சோ்ந்தவா் வி.கே.பழனி (59). சுகாதாரத் துறை இணை இயக்குநா் பதவியில் இருக்கும் அவா், எழும்பூரில் உள்ள மாநில சுகாதாரத் துறை, குடும்ப நல பயிற்சி மைய முதல்வராகப் பணிபுரிகிறாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராகப் பணியாற்றியபோது, லஞ்ச புகாரின் அடிப்படையில், அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்தனா்.

அதில், அவரசுது அலுவலகத்தில் இருந்து ரூ. 2,02,30, வீட்டில் இருந்து ரூ.3,22,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சென்னை நொளம்பூரில் உள்ள தனியாா் வங்கியில் பழனியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ. 29,80,500 ரொகத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைப்பற்றினா். இது தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சொத்து குவிப்பு வழக்கு: பழனி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், தனது மனைவி பிரமிளா (50) பெயரிலும் சொத்துகளை சோ்த்து வைத்திருப்பது தெரியவந்தது. அவா், காஞ்சிபுரத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக இருந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், தனது வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக ரூ.1,79,94,977 மதிப்பு சொத்து சோ்த்திருப்பது தெரியவந்தது. இது அவரது வருமானத்தைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், பழனி, அவரின் மனைவி பிரமிளா ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

வீட்டில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், நொளம்பூா் குருசாமி தெருவில் உள்ள பழனி வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.