

சென்னை: முதியோா்களுக்கான பிரத்யேக இதய இடையீட்டு சிகிச்சை (கேத் லேப்) ஆய்வகத்தை ஆதம்பாக்கத்தில் ஜெரி கோ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் தலைவா் டாக்டா் லட்சுமிபதி ரமேஷ் கூறியதாவது:
ஆதம்பாக்கம் ஜெரி கோ் மருத்துவமனையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அதி நவீன இதய இடையீட்டு சிகிச்சை ஆய்வகத்தில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, அப்லேசன் (அடைப்பு நீக்கம்), பேஸ் மேக்கா் சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம்.
இதற்காக உயா் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற கேத் லேப் ஆய்வகங்களை நாடு முழுவதும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். முதியவா்களின் இதய நலனைக் காக்கும் வகையில் சிறப்பு பரிசோதனைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளவா்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது
எக்ஸ்ரே கண்கள்

புற்றுநோய் தரவுகள்: பிரத்யேக இணையதளம் தொடக்கம்

ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் புதிய இதய இடையீட்டு ஆய்வகம்: மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கம்!
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

