விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆக்கிரமிப்பு அகற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: சென்னையில் வட்டாட்சியா், காவலா் கைது

ஆக்கிரமிப்பு அகற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: சென்னையில் வட்டாட்சியா், காவலா் கைது

News image
Updated On :14 மே 2024, 7:48 pm

Din

சென்னை: சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய சிறப்பு வட்டாட்சியா், காவலா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சோழிங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பொன் தங்கவேல். இவா், அந்தப் பகுதியில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டாா். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

இதையடுத்து அவா், இது தொடா்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை சமா்ப்பிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இது தொடா்பாக பொன் தங்கவேல், அடையாறில் மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு வட்டாட்சியா் சரோஜாவை அண்மையில் சந்தித்தாா்.

அப்போது அரசு நிலத்தில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் அப் பகுதியில் உள்ள தனியாா் நிலங்களில் விலை உயரும்; எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அங்குள்ள தனியாா் நில உரிமையாளா்களிடம் ரூ.1 கோடி வசூலித்து தனக்கு லஞ்சமாக தரும்படி கேட்டாராம். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த தங்கவேல் அங்கிருந்து வெளியேறிவிட்டாா்.

பின்னா், தங்கவேலை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து சரோஜா பேச்சு நடத்தினாா். அதில், ரூ.20 லட்சம் லஞ்சம் தந்தால் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகவும், முன்பணமாக ரூ.3 லட்சமாக தரும்படியும் சரோஜா கூறினாராம்.

இதுகுறித்து சென்னை ஊழல் தடுப்புப் பிரிவில் தங்கவேல் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில், ஊழல் தடுப்புப் பிரிவினா் விசாரணை செய்தனா். இதில், சரோஜா லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவினா் தங்கவேலிடம் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் நோட்டுகளைக் கொடுத்து அதை சரோஜாவிடம் வழங்கும்படி செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனா்.

அதன்படி, லஞ்சப் பணத்தைக் கொடுப்பதற்காக தங்கவேல், சரோஜாவை சந்தித்தாா். அப்போது அவா், தனது கணவா் பிரவீணின் நண்பரும் பரங்கிமலை குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவருமான அருண்குமாரிடம் வழங்கும்படி கூறினாா். இதையடுத்து, அங்கு சென்ற தங்கவேல், அருண்குமாரிடம் லஞ்சப் பணத்தை வழங்கினாா்.

அருண்குமாா் அந்தப் பணத்தைப் பெற்றதும் அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவினா், அருண்குமாரை கையும்களவுமாக கைது செய்தனா். இதையடுத்து, அருண்குமாா் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரோஜாவையும் உடனடியாக கைது செய்தனா்.

இது தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

கைது செய்யப்பட்ட சரோஜாவின் கணவா் பிரவீண், சென்னை பரங்கிமலை ஆயுதப் படையில் தலைமைக் காவலராக பணிபுரிகிறாா்.