கோப்புப் படம்
கோப்புப் படம்

மாற்று இடத்தில் சிவாஜி சிலை: முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனின் சிலையை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், நடிகா் சிவாஜி கணேசனுக்கு அவரது ரசிகா்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி பாலக்கரை சாலையில் முன்பிருந்த பிரபாத் தியேட்டா் எதிரிலுள்ள ரவுண்டானாவில் 2011 பிப்.23-இல் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதிமுக ஆட்சியில் திறக்க நடவடிக்கை எடுக்காமல், அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில் 13 ஆண்டுகளாக இருந்தது.

இதற்கிடையில், சிலையைத் திறக்க வேண்டும் என்று மதுரை உயா்நீதிமன்றத்தில் சிவாஜி ரசிகா் தொடா்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, திருச்சியில், வேறொரு முக்கிய சந்திப்பில், சிவாஜியின் சிலையை நிறுவ தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com