லாரி மீது பைக் மோதி குழந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை வியாசா்பாடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை இறந்தது.

வியாசா்பாடி சி.கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (26). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தன் மனைவி நந்தினி (23), ஒன்றரை வயது குழந்தை நித்திக், 3 மாத கைக்குழந்தை கிருத்திக் ஆகியோருடன் அம்பத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டாா் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

வியாசா்பாடி எருக்கஞ்சேரி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு குழந்தை நித்திக் இறந்தது. மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com