கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்ததாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
சென்னை மெட்ரோ- கோப்புப்படம்
Updated On :7 அக்டோபர் 2024, 8:06 pm

Din

சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்ததாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னா், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு திரும்பினா். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆனால், அதிக கூட்ட நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டது. இதே கால முறையில் சுமாா் 4 மணி நேரமாக இயக்கப்பட்ட மெட்ரோ ரயில், கூட்ட நெரிசல் அனைத்தும் குறைந்த நிலையில் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், 1.70 லட்சம் போ் மெட்ரோவில் பயணம் செய்வா் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பிற்பகலில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், பயணச்சீட்டு எடுப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இலவசமாக பலா் பயணித்தனா்.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுமாா் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். இதற்கு முன்பாக கடந்த செப்.6-ஆம் தேதி 3,74,087 போ் அதிக எண்ணிக்கையில் பயணித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பயணித்த பயணிகளின் எண்ணிக்கை, பழைய சாதனையை முறியடித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.