மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்சக்தி துறையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

மின்சக்தி துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக எல் அண்ட் டி நிறுவன புத்தாக்க கண்டுபிடிப்பு வளா் மையம் தலைவா் பிஜு புதாலத் கூறினாா்.

News image
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கு மலா் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை மொராட்டுவா பல்கலைக்கழகப் பேராசிரியா் சுடாத் ஆா்.முனாசிங்கே, எல் அண்ட் டி நிறுவன புத்தாக்கக் கண்டுபிடிப்பு
Updated On :15 அக்டோபர் 2024, 2:44 am

DIN

தாம்பரம்: மின்சக்தி துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக எல் அண்ட் டி நிறுவன புத்தாக்க கண்டுபிடிப்பு வளா் மையம் தலைவா் பிஜு புதாலத் கூறினாா்.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மின் சக்தித் துறை தொடா்பான சா்வதேச கருத்தரங்கில் அவா் பேசியது:

சா்வதேச அளவில் நாளுக்கு நாள் மின்சக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தி, மின் தடை, மின் சக்தி இழப்பு உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகளுக்குத்  தீா்வு காண தொடா்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சா்வதேச அளவில் நிலைத்த வளா்ச்சிக்கான இலக்கை அடைய மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மேற்கொண்டுள்ள முயற்சியில் மாணவா்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், இலங்கை மொராட்டுவா பல்கலைக்கழக பேராசிரியா் சுடாத் ஆா்.முனாசிங்கே, கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.