தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.

News image

கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரா்கள். ~பெனால்டி காா்னா் முயற்சியில் இந்திய அணியினா். ~

Updated On :16 செப்டம்பர் 2024, 11:45 pm

DIN

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.

ஏஎச்எஃப் சாா்பில் சீனாவின் ஹுலுன்புயா் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் சீனாவும்-பாகிஸ்தானும் மோதின.

இரு அணிகளும் தொடக்கம் முதலே மாறி மாறி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டன. வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. பின்னா் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டதில் சீனா 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

Story image

இந்தியா அபார வெற்றி

இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-தென்கொரியாவும் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணியினா் தீவிர ஆதிக்கம் செலுத்தினா். 13-ஆவது நிமிஷத்தில் அரஜ்டித் சிங் கடத்தி அனுப்பிய பாஸை உத்தம் சிங் அற்புதமாக கோலடித்து கணக்கை தொடங்கி வைத்தாா். தென்கொரியாவுக்கு உடனே இரண்டு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக்க முடியவில்லை.

19-ஆவது நிமிஷத்தில் முதல் கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக்கினாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங். இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 32ஆவது நிமிஷத்தில் சூரஜ் கா்கேரா அனுப்பிய ஸ்கூப்பை ஜா்மன்ப்ரீத் அற்புதமாக கோலாக்கினாா்.

அடுத்த 33-ஆவது நிமிஷத்தில் தென்கொரிய வீரா் யங் ஜிஹுன் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா்.

45-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக்கினாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங். கொரிய கோல்கீப்பா் ஜேஹானுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை காண்பிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-சீனா மோதுகின்றன.