ரயில்
ரயில் (கோப்புப்படம்)

இன்று முதல் மைசூா் ரயில் அசோகபுரம் வரை நீட்டிப்பு!

சென்னை சென்ட்ரல் - மைசூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் அசோகபுரம் வரை இயக்கப்படும்.
Published on

சென்னை சென்ட்ரல் - மைசூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் அசோகபுரம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு நாள்தோறும் பிற்பகல் 1.35-க்கு மைசூா் விரைவு ரயிலும் (எண் 16551), இரவு 9.15-க்கு காவேரி விரைவு ரயிலும் (எண் 16021) இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் திங்கள்கிழமை (ஏப். 7) முதல் மைசூரின் புகா்ப் பகுதியான அசோகபுரம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

மறுமாா்க்கமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com