தெருநாய்கள் விவகாரம்: சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் அணி திரண்டு போராட்டம்!

சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்!
சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்
சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்ANI
Published on
Updated on
1 min read

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேபீஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்த தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவில், தெருக்களில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு மாற்ற தில்லி, என்சிஆா் பகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, தெரு நாய்களுக்கு எதிராக இந்த உத்தரவு இருப்பதாகக் கூறி விலங்கு ஆர்வலர்களால் தில்லி உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று(ஆக. 17) காலை சென்னையிலும் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் விலங்குகளுக்கான உரிமைகளுக்கு போராடும் செயல்பாட்டாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

தெருக்களில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு மாற்ற தில்லி, என்சிஆா் பகுதி அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தால் 8 வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பல பகுதிகளிலும் பரவலாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்ட நிலையில், கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தில்லியைப் பின்பற்றி சென்னை உல்பட தமிழக பகுதிகளிலும் தெருநாய் தொல்லைக்கு உரிய தீர்வு காண மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னையில் இன்று காலை நடைபெற்ற போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.

Summary

Dog/animal lovers, animal rights activists staged a protest in Chennai against the Supreme Court order to send all stray dogs in Delhi-NCR to shelters within 8 weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com