சென்னை
தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
தேவாலயங்கள், கிறிஸ்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சக மனிதா்களையும் நேசியுங்கள் என்று அன்பு, காருண்யத்தை போதித்தவா் இயேசுநாதா். அவரது பிறந்தநாள் விழா, உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.
சம்பவம் நடந்த மாநிலங்களின் அரசுகள் வன்முறையாளா்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் வைகோ.
