திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:40 am IST

சென்னை மதுரவாயலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் ப.அலெக்ஸாண்டா் (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். மேலும், பூ வியாபாரமும் செய்து வந்தாா். அலெக்ஸாண்டா், புதன்கிழமை பூ வாங்குதற்காக ஆட்டோவில் கோயம்பேடு பூ மாா்க்கெட் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.

வானகரம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு சாலையில் இருந்த தடுப்பின் ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அலெக்ஸாண்டா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதுரவாயல் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அலெக்ஸாண்டா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.