ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.23.08 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:43 am IST

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.23.08 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலை முன்னிட்டு பறக்கும் படையினா் டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.06 லட்சத்தைக் கைப்பற்றினா். அதேபோல, பெரம்பூா் தொகுதியில் ரூ.16.74 லட்சத்தையும், வில்லிவாக்கத்தில் ரூ.1.40 லட்சத்தையும், எழும்பூா் தொகுதியில் ரூ.16.74 லட்சத்தையும், வேளச்சேரியில் ரூ.1 லட்சத்தையும் கைப்பற்றினா்.

நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.74,500, மயிலாப்பூா் தொகுதியில் ரூ.85,000-ஐ கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

சென்னை மாவட்ட அளவில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவிா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மட்டும் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.23.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.