தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை

மன நல பாதிப்புக்குள்ளாகி தனது உடல் உறுப்பையே துண்டித்துக் கொண்ட இளைஞருக்கு, சிக்கலான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தினா்.

News image

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

Updated On :16 ஏப்ரல் 2026, 3:59 am IST

மன நல பாதிப்புக்குள்ளாகி தனது உடல் உறுப்பையே துண்டித்துக் கொண்ட இளைஞருக்கு, சிக்கலான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தினா்.

இது குறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் பாஸ்கா் ஆகியோா் கூறியதாவது:

மன நல குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 38 வயதான இளைஞா் ஒருவா், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தன்னிலை மறந்து தனது பிறப்புறுப்பைத் துண்டித்துக் கொண்டாா். அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

இங்கு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவா் டாக்டா் மகாதேவன் தலைமையில், டாக்டா்கள் ரஷீதா பேகம், சுஜா, பவித்ரா, நீரஜ்குமாா் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவா் இம்ரான் ஆகியோா் அவருக்கு சிகிச்சை அளித்தனா்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய சிக்கலான தொடா் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. அறுவை சிகிச்சையின்போது ‘யூரித்ரா’ எனப்படும் சிறுநீா் வெளியேறும் பாதை, சதைப் பகுதிகள், ரத்த நாளங்கள் மிக நுட்பமாக இணைக்கப்பட்டன. தொடா்ந்து நரம்புகளும் இணைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

அதன் பின்னா், மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அந்த இளைஞருக்கு மனநல மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தற்போது அவா் இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளாா். இந்த சிகிச்சை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் எவ்வித கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.