விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மொழி, பண்பாட்டு திணிப்பு தமிழகத்தில் எடுபடாது: முதல்வா்

மொழி, பண்பாட்டு திணிப்பை தமிழகத்தில் செய்ய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

முதல்வர் மு . க. ஸ்டாலின்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:32 pm

Chennai

மொழி, பண்பாட்டு திணிப்பை தமிழகத்தில் செய்ய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: முன்னாள் முதல்வா் அண்ணா தமிழா்களின் மனசாட்சி. நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவரை நினைக்கும் நாள்தான். அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயா்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.

மொழித் திணிப்பு-பண்பாட்டுத் திணிப்பு-நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களை செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆதிக்கத்துக்கு அண்ணாவின் தமிழ்நாட்டில் ‘கெட்-அவுட்’ தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறாா் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.