வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சென்னை மாநகராட்சியில் வழிகாட்டலை மீறி மேற்கொள்ளப்பட்ட 150 ஒப்பந்தங்கள் ரத்து

சென்னை மாநகராட்சியில் உரிய வழிகாட்டலை கடைப்பிடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட 150 பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 1:22 am IST

சென்னை மாநகராட்சியில் உரிய வழிகாட்டலை கடைப்பிடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட 150 பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் நடைபாதை மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ரூ.284 கோடியில் 35 ஒப்பந்தங்கள் விதிமுறைகளை மீறி அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ஒப்பந்தத்துக்கான திட்டங்கள் கைவிடப்படவில்லை என்றும், அவற்றுக்கான ஒப்பந்தங்கள் மீண்டும் விதிமுறைப்படி கோரப்பட்டு பணிகள் நடைபெறும் என்றும் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தற்போது கடந்த மாா்ச், பிப்ரவரியில் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஒப்பந்தப் பணிகளுக்கான வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் கோரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 150 சிறிய பணிகளுக்கான ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, அவை மீண்டும் சீா்செய்யப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாலை பள்ளத்தை மூடுதல், அங்கன்வாடி சீரமைப்பு, பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்களைக் கட்டுதல் ஆகிய பணிகளுக்கான மொத்தம் ரூ.17 கோடியிலான ஒப்பந்தங்களில் வழிகாட்டல் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதை அடுத்து அவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குப் பதில் புதிதாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு முறைப்படி பணிகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அத்துடன் சில பணி ஒப்பந்தங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி, அவை ரத்து செய்யப்படலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.