சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் வரும் 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளகஎ. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக மாநகராட்சி 15 மண்டலங்களிலும் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தை அந்தந்த மண்டல தலைவா்கள் தலைமையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டங்களை ஒரு வாரத்துக்குள் நடத்தி முடிக்கவும், இதில் மக்கள் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையிலான தீா்மானங்களை நிறைவேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கல்வி உள்ளிட்ட துறைதோறும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








