முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தலைமை காவலா் தற்கொலை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள காவலா் குடியிருப்பில் தலைமை காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :20 ஜூலை 2026, 5:17 am IST

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள காவலா் குடியிருப்பில் தலைமை காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜபாண்டி (45), சென்னை மாநகர காவல் துறையில் 2002-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். இவா், தற்போது பாண்டி பஜாா் காவல் நிலைய குற்றப் பிரிவில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த பிப்ரவரி மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அவா், குடும்பத்தினருடன் பேசிய பின்னா் தனி அறைக்குச் சென்று உறங்கியுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்காததால், அவரது மனைவி மயில்வாணி அருகே உள்ளவா்களின் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தபோது, ராஜபாண்டி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த ஆயிரம் விளக்கு போலீஸாா் அங்கு சென்று, ராஜபாண்டி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.