பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஒசூரில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: காவலா் பணியிடை நீக்கம்!

ஒசூரில் 10 ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :12 ஜூலை 2026, 12:47 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 10 ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஒசூா் மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் பச்சன், தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் ரோஷன் (18) ஒசூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தாா். பொதுத் தோ்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி ஒசூா் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் மறுதோ்வு எழுதுவதற்காக சென்றாா்.

அப்போது, அங்கு பணியில் இருந்த காவலா், ரோஷனிடம் இருந்த கைப்பேசியை வாங்கியுள்ளாா். பின்னா், அந்த கைப்பேசியை அவா் பாா்த்தபோது அதில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கை செய்யும் விடியோ இருந்ததாம். இதனால் கைப்பேசியை சிப்காட் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து விசாரணைக்கு கடந்த 9 ஆம் தேதி சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்ற ரோஷனின் தாயாா் சங்கீதா மற்றும் அவரது சகோதரா் காவலா் சந்திரனைச் சந்தித்து கைப்பேசியை தருமாறு கேட்டுள்ளனா். ஆனால், மாணவரை அழைத்து வருமாறு காவலா் கூறியுள்ளாா்.

இதையடுத்து சிப்காட் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை சென்ற ரோஷனிடம் விசாரணை நடத்திய போலீஸாா், இதுபோல விடியோ எடுக்கக் கூடாது என எச்சரித்து, எழுதி வாங்கியுள்ளனா். அப்போது, காவலா் சந்திரன், ரோஷனிடம் ரூ. 2000 வாங்கிக் கொண்டு கைப்பேசியை தந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டிற்கு சென்ற ரோஷன் தனது கைப்பேசியில், தனது தாய்க்கு உருக்கமான விடியோவை பதிவிட்டுவிட்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, மாணவரின் இறப்புக்கு போலீஸாா் தான் காரணம் என அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி அனிதா, சிப்காட் பாரா காவலா் சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.