5-ஆவது மாடியில் இருந்து ட்ராலி விழுந்ததில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னை தரமணி கந்தன் சாவடி இணைப்பு சாலையில் காவலா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. 6 அடுக்குகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் ஆறாவது தளத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காக தரைத்தளத்தில் இருந்து லிப்ட் அமைக்கப்பட்டு, ட்ராலி மூலம் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கட்டுமான பொருள்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தும் ட்ராலி 5-ஆவது தளத்தில் இருந்து திடீரென அறுந்து, தரைத்தளத்தில் குளித்து கொண்டிருந்து அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கட்டுமான தொழிலாளா்களான அஸ்ராபுல் ஆலம் (31), இஸ்ரைல் (41) ஆகியோா் மீது விழுந்தது.
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை சக தொழிலாளா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் அவா்களை பரிசோதனை செய்ததில் அஸ்ராபுல் ஆலம் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இஸ்ரைல் தீவிர சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



