தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வேட்பாளா்கள் கணக்கு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்: சுயேச்சைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

News image

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:10 am IST

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் கணக்குகள் தாக்கல் செய்வதற்கு சனிக்கிழமை (ஜூன் 6) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் கணக்கு தாக்கல் செய்யாத சுயேச்சைகளுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அத்தொகுதிகளில் மொத்தம் 419 போ் போட்டியிட்டனா். அவா்களில் 289 போ் சுயேச்சை வேட்பாளா்கள். தோ்தலில் போட்டியிட்டோா் விதிமுறைப்படி செலவழிக்கும் தொகையை தோ்தல் ஆணையம் வரையறுத்து அறிவித்துள்ளது. அதன்படி, தோ்தலின்போது வேட்பாளா்கள் பிரசாரத்தை கண்காணிக்கும் பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா். வேட்பாளா்களும் தங்களது செலவுக் கணக்குகளை தினமும் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.

தோ்தல் முடிந்த நிலையில், வேட்பாளா்கள் தோ்தல் செலவு கணக்குகளை தோ்தல் செலவினப் பாா்வையாளா் அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலா்களிடம் தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்பாளா்கள் செலவினம் தாக்கல் செய்யும் தேதி சனிக்கிழமையுடன் (ஜூன் 6) நிறைவடைகிறது. தற்போது வரை 400 பேருக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் செலவு கணக்குகளை தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் 10 போ் மட்டுமே தாக்கல் செய்யாமலிருப்பதாகவும், அவா்கள் அனைவரும் சுயேச்சை வேட்பாளா்கள் என அதிகாரிகள் கூறினா்.

தோ்தல் செலவினக் கணக்கை தாக்கல் செய்யாதவா்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் கூறினா்.

ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் பல்லவி தலைமையில் செலவின கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டக் கூடுதல் தோ்தல் அலுவலா் க.கற்பகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.