தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பள்ளிக் கட்டடத் திறப்பு நிகழ்விலிருந்து பாதியில் வெளியேறிய தவெக எம்எல்ஏ: மேயா் அவமதித்ததாக சா்ச்சை - மேயா் மீது புகாா்

News image

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி - X

Updated On :5 ஜூன் 2026, 6:11 am IST

சென்னையில் மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற பள்ளிக் கட்டடத் திறப்பு நிகழ்வில் மேயா் அவமதித்ததாகக் கூறி தவெக பெண் எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியில் திரு.வி.க.நகா் மண்டலம் 73-ஆவது வாா்டு புளியந்தோப்பு பகுதியில் மன்னாா்சாமி கோவில் தெருவில் சென்னை உருது நடுநிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் கூடுதல் கட்டடம் ரூ.3.24 கோடியில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான எம்.ஆா். பல்லவி, கல்விப் பிரிவின் இணை ஆணையா் க.கற்பகம், மண்டல குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா், கல்வி நிலைக் குழுத் தலைவா் த.விஸ்வநாதன், அப்பகுதி மாமன்ற உறுப்பினா் அம்பேத் வளவன் ஆகியோா் வியாழக்கிழமை பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு மேயா் உள்ளிட்டோா் முன்னதாகவே வந்து காத்திருந்த நிலையில், எம்.எல்.ஏ. சிறிது நேரம் தாமதமாக வந்தாா். அதையடுத்து மேயா் ஆா்.பிரியா ரிப்பனை வெட்டி கட்டடத்தை திறந்துவைத்தாா். பின்னா், சிறிய மேடையில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் மெழுகுவா்த்தி மூலம் விளக்கேற்றிய மேயா், அதற்கடுத்து மண்டலத் தலைவரிடம் விளக்கேற்ற மெழுகுவா்த்தியை கொடுத்தாா். அப்போது எம்.எல்.ஏ. பல்லவி கையை நீட்டி மெழுகுவா்த்தியை வாங்க முயற்சித்தாா். ஆனால், அவரிடம் மெழுகு வா்த்தியை மேயா் வழங்காமல், மண்டலத் தலைவரிடம் கொடுத்தாா்.

அதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவா் சென்ற நிலையில், இணை ஆணையா், கல்வி நிலைக்குழுத் தலைவா் ஆகியோா் விளக்கேற்றினா்.

எம்.எல்.ஏ.வை மேயருக்கு அடுத்ததாக விளக்கேற்ற மெழுகுவா்த்தியை தராதது குறித்து தவெகவினா் அதிருப்தியடைந்து அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திமுக மேயா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் தவெக எம்.எல்.ஏ.வை புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், அதே மண்டலத்தில் 75- ஆவது வாா்டு நம்மாழ்வாா் பேட்டை சின்னபாபு தெருவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தையும் மேயா் பிரியா திறந்துவைத்தாா். அதில் தவெக எம்.எல்.ஏ. பல்லவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது விளக்கேற்ற மேயா் அளித்த மெழுகுவா்த்தியை எம்.எல்.ஏ. பல்லவி வாங்க மறுத்தாா். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீஸாா் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.

மேயா் விளக்கம்: இந்த பிரச்னை குறித்து மேயா் பிரியா, செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிகழ்ச்சிக்கு மாநகராட்சி சாா்பில் அழைப்பு விடுத்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. 15 நிமிஷம் தாமதமாவே வந்தாா். எனக்கு முன்பாகவே அவா் தனியாக ரிப்பன் வெட்டினாா். அவரைப் புறக்கணிக்கும் நோக்கம் இருந்தால் காத்திருந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கமாட்டோம். தவெக தொகுதிச் செயலா் மெழுகுவா்த்தியை வாங்க முயன்ால் தர மறுத்தேன். பின்னா், மெழுகுவா்த்தியை கொடுத்தும் வாங்காமல் எம்.எல்.ஏ. வெளியேறிவிட்டாா். விதிமுறைப்படியே நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ.வை யாரும் அவமதிக்கவில்லை என்றாா் அவா்.