சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

எரிவாயு உருளை விலை உயா்வு: சீமான் கண்டனம்

வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தல்

News image

சீமான்.

Updated On :9 ஜூன் 2026, 3:57 am IST

வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு ரூ.29 உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியுள்ளது ஏழை மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும்.

ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயா்வதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது.

மத்திய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிா்ணய அதிகாரத்தை தனியாா் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரைவாா்த்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.

எனவே, எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், இதுபோன்ற நெருக்கடியானச் சூழலில், தமிழக மக்களின் நலன் கருதி, தவெக தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.