முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 21, 22) வண்டலூா் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு இலவச நுழைவு என அறிவிக்கப்படதையடுத்து, அனைத்து இலவச நுழைவுச்சீட்டுகளும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பூங்கா நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 21, 22) அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு இலவச நுழைவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்வது கட்டாயம். அதிக எண்ணிக்கையில் பாா்வையாளா்கள் வர வாய்ப்புள்ளதால், நாளொன்றுக்கு 20,000 பாா்வையாளா்கள் என்ற வரம்பு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், இரு நாள்களுக்கான அனைத்து இணையதள முன்பதிவு நுழைவுச் சீட்டுகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடுகள்: இந்த இரு நாள்கள் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்களின் வசதிக்காக பூங்கா வளாகத்துக்குள் தனி வாகன நிறுத்துமிடமும், கனரக மற்றும் பிற வாகனங்களுக்கு பூங்காவின் கூடுதல் வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்கா நுழைவாயிலுக்கு வருவதற்காக இலவச வாகன சேவை, 8 வயதுகுள்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவா்களது பெற்றோா் அல்லது பாதுகாவலா்களின் தொலைபேசி எண் விவரங்களுடன் கூடிய அடையாளப் பாதுகாப்புக் கைக்கட்டுகள், அவசர தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ் வசதிகளுடன் கூடிய மருத்துவ உதவி மையங்கள் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










